வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 பிப்ரவரி 2019 (06:55 IST)

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்து முறைப்படி நடைபெறும் திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்துமத திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய் ஸ்டாலின், பொதுமக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'இந்துக்களின் பாரம்பரிய திருமணங்கள் குறித்து சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக புரிந்து கொண்டது மட்டுமின்றி அந்த கருத்தை அவர் பரப்பியும் வருகிறார். பாரம்பரியத்தில் வேரூன்றிய விஷயம் ஒன்றை தவறாக பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்து மதத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை தமிழகத்தில் இல்லை என்பதை ஸ்டாலின் உணரவேண்டும். வெகுஜன நம்பிக்கையை பாதிக்கும் விஷயம் என்பதை உணர்ந்து ஸ்டாலின் அவர்கள் பேச வேண்டும். அவருடைய பேச்சுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.