ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (12:14 IST)

இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மத்திய அமைச்சர்!

இளையராஜா - 75 விழாவின் 2 வது நாளான நேற்று ரஜினி, கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குனர் ஷங்கர், பலர் இளையராஜாவை பாராட்டி பேசினார்கள்.  விழாவில் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசுகையில்,


 
ஒரு ரசிகனாக இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தினேன். இதயங்களில் உள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் இது. சென்ற ஆண்டு பிரதமர் மோடி பத்மவிபூஷன் விருது வழங்கி தமிழர் அனைவருக்கும் பெருமை சேர்த்தார். இளையராஜா ஆன்மீக ரீதியாகவும் தர்மத்தின் ரீதியாகவும் வாழ்ந்து வருபவர். 


 
தெய்வமான மூன்று தேவியரும் இருக்ககூடிய மாமனிதன் தமிழகத்திற்கு கிடைத்த மகா பாக்கியம். அவரது பாதத்தினை தொட்டு வணங்கிய போது மூவரின் ஆசியும் கிட்டியதாக எண்ணினேன் என்றார்.