1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (09:01 IST)

அர்ச்சகர் பயிற்சி பெறுவோர் ஊக்கத் தொகை உயர்வு: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

அர்ச்சகர் பயிற்சி பெறுபவர்கள் ஊக்கத் தொகை ரூபாய் 2000 உயர்த்தப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்
 
திமுக அரசு தோன்றிய உடன் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அர்ச்சகர் பயிற்சிக்கும் தகுந்த ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் அர்ச்சகர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக இதுவரை மாதம் ரூபாய் 1000 என ஊக்கத் தொகை வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரூபாய் 2000 உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து தற்போது அர்ச்சகர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 3000 ஊக்கத்தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்புக்கு அர்ச்சகர் பயிற்சி பெறும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.