மனசாட்சி இல்லாதவங்க கூட அண்ணாமலை மாதிரி பேசமாட்டாங்க! – சேகர்பாபு பதிலடி!
தமிழக காவல்துறை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டவுடனே அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் துரிதமாக தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்டதோடு உடனடியாக 3 பேரை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை காவல்துறை குறித்தும், டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மேலும் காவல்துறை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஏவல்துறையாக செயல்படுகிறது என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையாக கருத்து தெரிவித்துள்ள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு “குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக பலரும் பாராட்டினார்கள். காவல்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சான்று. மனசாட்சி இல்லாதவர்கள் கூட அண்ணாமலை போல காவல்துறையை பற்றி பேச மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.