ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (13:01 IST)

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 : நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1000 என்று அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தமிழக பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்துவரும் நிலையில் மாதம் ரூபாய் 1000 குடும்ப தலைவிகளுக்கு கொடுப்பது குறித்த திட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
 
குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையான மாதம் ரூபாய் 1000 தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்றும் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த தொகை வழங்கப்பட இருப்பதாகவும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று கூறியிருப்பதால் அனைத்து மகளிருக்கும் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
Edited by Siva