வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (07:46 IST)

இன்று தமிழ்நாடு பட்ஜெட்: குடும்ப தலைவிக்கு ரூ.1000 அறிவிப்பாரா பிடிஆர்?

tn budget
இன்று தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மகளிர்க்கு மாதம் ரூ.1000 என்ற அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். 2023 24 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தி உள்ளன. 
 
ஏற்கனவே சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது இந்த வருட பட்ஜெட்டில் மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற அறிவிப்பு வெளிவரும் என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே இந்த பட்ஜெட்டில் மகளிர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் சில சலுகை அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva