வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (13:07 IST)

புதிய கல்விக்கொள்கையை பின்பற்ற தயார்: அமைச்சர் பொன்முடி

ponmudi
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம் என்றும் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் 
 
சர்வதேச மொழியான ஆங்கிலம் தாய்மொழியான தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் தமிழகத்திற்கு போதும் என்றும் அவர் தெரிவித்தார்