வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 மே 2022 (19:18 IST)

மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர்: அண்ணாமலை ஆவேசம்

Annamalai
மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் என அண்ணாமலை ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் மின்வெட்டு கடினமாக உள்ளது என்றும் அதை சரிசெய்ய அமைச்சர்களால் முடியவில்லை என்றும் மின்வெட்டு குறித்து கேள்வி கேட்டால் பொதுமக்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டுகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
மின்வெட்டு குறித்து அதிகமாக பேசியது நான்தான் முடிந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை சவால் விட்டார்
 
மேலும் மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் ஆனா இது தான் நிலைமை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.