செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Electricity
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை போல மீதம் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் அதனால் தமிழக தேவை போக மீதமிருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் எந்த இடத்திலாவது மின்தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாக தான் இருக்கும் என்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்