வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (14:04 IST)

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு எப்போது: அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு..!

Ponmudi
தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தேதியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் நடைபெறும். முதலில் விளையாட்டுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும், இதையடுத்து ஜூலை 29 ஆம் தேதி பொது கலந்தாய்வும் நடைபெறும்.

இந்த கலந்தாய்வு செப்.11 வரை நடைபெறும் மாணவர்கள் ஆன்லைன் முறையில் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

மேலும் தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், கிராமப்புற பகுதிகளில் இருந்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva