வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜூலை 2024 (12:59 IST)

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடப்பு ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்து இருப்பதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன
 
இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது.  தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியிருந்தது.
 
என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில  மாற்றங்களாலும்,  சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று விளக்கம் அளித்தது.  இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில்,  நாடு முழுவதும்  கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு,  அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.  இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

 
நீட் தொடர்பான முக்கிய வழக்கு வருகிற ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தை விசாரணைக்கு வர உள்ளதால் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.