1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister ponmudi participate in grama sabha

கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!

ponmudi
கிராம சபை கூட்டத்தில் சுற்றிவளைத்த பொதுமக்கள்: வெளியேறிய அமைச்சர் பொன்முடி!
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, கிராமத்தினர் சுற்றிவளைத்து கேள்விகளை கேட்ட நிலையில் அவர் அந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்திருந்தார் 
 
அப்போது அவரிடம் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த குறைகள் அனைத்தும் ஒரு சில நாட்களில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்தும் மக்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அவர் திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் கட்சியில் என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும்: சசிதரூர்