திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 16 ஜூலை 2020 (20:39 IST)

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட 4500 க்கும் மேற்பட்ட ஒரு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
ஏற்கனவே கல்வி அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் கல்வி அமைச்சர் அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்  கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் 
 
கடந்த சில வாரங்களுகு முன்னர் தமிழக அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் தனிமைப்படுத்தியவர்களை சந்தித்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது