1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (13:28 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்: தமிழகத்தில் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 4000க்கும் அதிகமானோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதும், அதில் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் விஐபிக்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், காவல்துறையினர்களை அடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
கோவை மாவட்ட ஆட்சியருக்கு கடந்த சில நாட்களாகவே கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதையடுத்து அவருக்கு சோதனை செய்ததில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.