ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (08:20 IST)

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக 2000ஆம இருந்த சென்னை கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரமாக குறைந்துள்ளது. இருப்பினும் சென்னையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
இந்த நிலையில் சென்னையில் ஏற்கனவே ஒரு சில காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார் 
 
சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்த குருமூர்த்தி என்பவருக்கு சமீபத்தில் கொரோனா அறிகுறி இருந்தது என்றும், அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிகிறது.
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி அவர்களுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சென்னை சூளைமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது