ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (09:55 IST)

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. கிளையில் சிக்கிய காதலி.. நீரில் மூழ்கிய காதலன்! – தேனி அருகே சோகம்!

brahmaputra drown
தேனியில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்து கொள்ள காதல் ஜோடி முயன்ற நிலையில் காதலி மட்டும் மரக்கிளையில் சிக்கிக் கொள்ள காதலன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் நடந்துள்ளது.



தேனி அழகர்சாமி காலணி பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், இந்த விஷயம் அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து இருவரையும் கண்டித்துள்ளனர்.

இதனால் சேர்ந்து வாழ முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர். இதற்காக தேனி உழவர் சந்தை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் சென்று குதித்துள்ளனர். குதிக்கும்போது சிறுமி அங்கிருந்த மரக்கிளை ஒன்றில் மாட்டிக் கொள்ள காதலன் தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.

அவ்வழியாக சென்றவர்கள் சிறுமி படுகாயங்களுடன் மரக்கிளையில் சிக்கியிருப்பது கண்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சிறுமி மீட்கப்பட்டதுடன், இறந்த அஜய்குமாரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K