வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: போடி , சனி, 23 மார்ச் 2024 (12:35 IST)

நான் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால்- என் சட்டையை பிடித்து கேட்கலாம் என்று கூறிய திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்!

போடி நகரின் மையப் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தங்க தமிழ்செல்வன் அவர் பின்னர் தேர்தல் பணிகளுக்கான தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றினார்
 
அப்போது அவர் பேசியது:
 
ஓபிஎஸ்-க்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த உங்களை கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சந்திக்கவில்லை வெறும் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு நான் நாள்தோறும் மக்களை சந்தித்து வருகிறேன் 
 
என்னை தேனி பாராளுமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுத்தால் போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி விவசாயம் செழிக்க பாடுபடுவேன்.
 
நான் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என்னை சட்டையை பிடித்து கேட்கலாம்  எனவே பொதுமக்களாகிய நீங்கள் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ் செல்வன் ஆகிய எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்.
 
இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்