செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (08:05 IST)

ஜாதிப்பற்று தவறல்ல, ஜாதி வெறிதான் தவறு: ரஞ்சித்தை மறைமுகமாக தாக்கினாரா அமைச்சர்?

சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் ஜாதி குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார். இதற்கு திருமாவளவன், சுப.வீரபாண்டியன், இல.கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்  சாதியப்பற்று இருப்பது தவறில்லை. சாதிய வெறி தான் இருக்கக்கூடாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மரபணு இருப்பது போன்று ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு மரபணு இருப்பதாகவும், அந்த மரபணுவில் அந்த சமுதாயத்தில் அடையாளங்கள் ஊறி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்னொரு சாதியை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருக்கக்கூடாது என்றும், தனது சமுதாயம் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு இயக்குனர் ரஞ்சித்துக்கு மறைமுக பதிலடியாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.