1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. H.Raja condemned for caste domination group

இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? எச்.ராஜா கடும் தாக்கு

ஜாதி ஒழிப்பு
ஜாதியை ஒழிப்போம் என்ற பெயரில் ஜாதியை தூண்டிவிடும் வேலையை ஒருசில அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றனர். ஜாதி பெயரிலேயே அரசியல் கட்சி தொடங்கி, ஜாதியை ஒழிப்போம் என போலி கோஷங்கள் போடும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்து

இந்த நிலையில் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் 'காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம் என்றும், கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம் என்றும் கோஷமிட அதை சில வாலிபர்கள் வழிமொழியும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த பலர் இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பி வருகிறோம்

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கருத்து கூறியதாவது: இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு திருமாவளவன் போன்றோரின் சரக்கு மிடுக்கு பேச்சே காரணம். இம்மாதிரி போக்கு சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளேன். இம்மாதிரி செயல்கள் அண்ணன் அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்
அடுத்த கட்டுரையில்
ஆள் கடத்தலை தடுக்க வேண்டும்: பிரதமருக்கு கமல் கடிதம்