திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (10:35 IST)

மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகம்: ஆளுனர் நடவடிக்கை குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ்..!

MANO THANGARAJ
விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம் மற்றும் மணிப்பூர் கலவரம் ஆகியவற்றை திசை திருப்பவே ஆளுநர் அரங்கேற்றிய நாடகம் தான் செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
 
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக நேற்று இரவு அதிக அதிரடியாக ஆளுநர் ரவி அறிவித்தார் 
 
ஆனால் அதன் பின்னர் அவர் அதை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
 
ஆளுநர் தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி போட்ட உத்தரவை திரும்பப் பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப அரங்கேற்றிய நாடகமே...!
 
 
Edited by Mahendran