ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (10:22 IST)

மாட்டிறைச்சி விற்றவரை மிரட்டிய வட்டாட்சியர்! – இடமாற்றம் செய்து உத்தரவு!

திருப்பூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்ற கடை உரிமையாளரை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இறைச்சி கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அக்கடையில் மாட்டிறைச்சி விற்கப்பட்டதற்காக அங்கு வந்த வட்டாட்சியர் தமிழ்செல்வன், மாட்டிறைச்சி விற்க கூடாது என கறிக்கடைக்காரரை மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.

வட்டாட்சியர் தமிழ்செல்வனின் செயலுக்கு கடும் கண்டனங்களை பலர் தெரிவித்து வந்த நிலையில் அவரை ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.