தொடர்புடைய செய்திகள்
- உடல்நிலை தேறி மீண்டும் ஷூட்டிங்கில் பாரதிராஜா… வெளியான புகைப்படங்கள்!
- கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து வீரர் பிளிண்ட் ஆஃப். மருத்துவமனையில் அனுமதி
- பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்!
- ஓரிரு மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்!
- நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி!
அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு.. 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் திடீரென ஆய்வு செய்ததில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்களை அவர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் திடீர் என ஆய்வு செய்தார்.
அப்போது உரிய நேரத்தில் பணிக்கு 4 அரசு மருத்துவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 மருத்துவர்களையும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்
மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் பணியிட மாற்றம் செய்தார்/ திடீர் ஆய்வுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த அதிரடி நடவடிக்கையை மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
