திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (20:56 IST)

முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தியதால் தடுப்பூசிகள் வந்துள்ளன: அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் ஜூன் 3 முதல் தடுப்பூசியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது 
 
இதனை அடுத்து இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
 
மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் தான் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மற்றும் 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்துள்ளன என்று தெரிவித்தார். மொத்தம் 6.5 லட்சம் தடுப்பூசி தற்போது இருப்பதாகவும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்