சீன அதிபர் வருகிறார், யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்!!

Arun Prasath| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (17:41 IST)
சீன அதிபர் வருகையை ஒட்டி, மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மாமல்லபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு நாட்டு உறவுகள் குறித்தும், கலாச்சாரம், வணிகம் ஆகியவை குறித்தும் இருவரும் கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த நிகழ்வை ஒட்டி 22 கடலோர மீனவ கிராமங்களிலுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :