செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (16:05 IST)

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்! – திமுக குறித்து ஜெயக்குமார்!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில் அதை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் தேர்தல் போட்டி குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் திமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் “உள்ளாட்சி தேர்தல் பணிகளில் அதிமுக படுவேகமாக செயலாற்றி கொண்டிருக்கிறது. மத்திய 13 ஆண்டுகள் அங்கம் வகித்தபோதும் திமுக தமிழகத்திற்காக எதையுமே செய்யவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலுக்கு ஆலோசனை நடத்துவது கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.