1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (13:37 IST)

திராவிட கட்சிகளுடன் கூட்டணியா? பிச்சிகிட்டு ஓடும் சீமான்!

திராவிட கட்சிகளுடன் நாம் தமிழர் கூட்டணி அமைக்குமா என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். 
 
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீமானின் நம தமிழர் கட்சி சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒன்றியத்தில் ஒரு இடம் கிடைத்ததால் நாம் தமிழர் பின்தங்கி விடவில்லை. கடந்த முறை 4 சதவீதமாக இருந்த வாக்குகள் இந்த முறை 10 சதவீதமாக உயர்ந்திருக்கின்றன என பேட்டி அளித்தார். 
 
இதன் பின்னர் தற்போதைய பேட்டியில், நாம் தமிழர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து பிரசாரத்தை தொடங்கி விட்டோம். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. வரும் தேர்தலில் எங்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என தெளிவாக தெரிவித்துள்ளார்.