புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (12:30 IST)

அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாட்டேன்! – கார் வென்ற வீரர் ரஞ்சித்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் பல காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித் அடுத்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் பிரபலமான அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 740 காளைகள் களமிறங்கிய இந்த போட்டியில் 688 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் இளம் வீரர் ரஞ்சித் ஒரே சுற்றில் 13 காளைகளை அடக்கி சாதனை படைத்தார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தனது வெற்றி குறித்து பேசிய ரஞ்சித் “கடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் என் அண்ணன் கார் பரிசு பெற்றார். ஆனால் குடும்பத்தின் வறுமை சூழல் காரணமாக அதை விற்க வேண்டியதாயிற்று. ஆனால் இந்த முறை காரை நான் விற்க விரும்பவில்லை. முதல்வர் கையால் கார் பெற போவதில் மகிழ்ச்சி. மேலும் அடுத்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள திட்டமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ரஞ்சித்தின் அண்ணன் ராம் குமார் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி கார் பரிசாக பெற்றது குறிப்பிடத்தக்கது.