இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்... நடுக்கடலில் ஆட்டம் போட்ட ஜெயகுமார்!
மீனவர் நலனை மேம்படுத்த புதிய திட்டங்களை கடலுக்குள் சென்று திறந்து வைத்த அமைச்சர் ஜெயகுமார் தற்போது கவனம் ஈர்த்துள்ளார்.
மீனவர் நலனை மேம்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் 30 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவி மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என கூறியிருந்ததை இப்போது நடத்தியுள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.
இந்த மீன் உறைவிடங்களை கரையில் இருந்தவாறு கொடியசைத்து திறந்து வைக்காமல் கப்பல் ஏறி கரையில் இருந்து 4 கிமி பயணித்து, நடுக்கடலின் நின்று இருந்த கப்பலுக்கு தாவி கடலுக்குள் சென்று அந்த திட்டத்தை துவங்கி வைத்தார். இது அங்கு இருந்த மீனவர்களை வெகுவாக கவர்ந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் வாழ்வு எவ்வளவு துயர் நிறைந்ததை என்பதை எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏதோ அவங்க கடலுக்கு போறாங்க, வலையை வீசறாங்க, மீன் பிடிக்கிறாங்கன்னு நினைச்சிடக்கூடாது, அவங்க எவ்வளவு ஆபத்தில், சவால்களுடன் மீன் பிடிக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.