1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 ஆகஸ்ட் 2020 (12:43 IST)

எஸ்வி சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் இதை செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார்

புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க மாட்டோம் என்றும் தமிழகத்தில் தொடர்ந்து இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்றும் முதல்வர் உறுதிபட சமீபத்தில் கூறினார்
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் எஸ்வி சேகர் கூறியபோது, ‘
அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது’ என்று கூறினார்
 
நடிகர் எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் ’எஸ்வி சேகர் மானம் ரோசம் உள்ளவராக இருந்தால் அதிமுக எம்எல்ஏ வாக அவர் ஐந்து ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்ஷனை திருப்பித் தரவேண்டும், தருவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அமைச்சரின் இந்த கேள்விக்கு எஸ்வி சேகர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்