திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (15:40 IST)

சசிகலாவால ஆகல.. அம்மாதான் காரணம்! – ஜெயக்குமார் சுளீர் பதில்!

சமீபத்தில் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து பேசிய கருத்துகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் தற்சமயம் பெரும் அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாமல் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழக அரசியல் சூழல் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக சசிகலாவை வெளியே கொண்டுவர அமமுகவும் தங்களது முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி தற்போது திமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள தங்க.தமிழ்செல்வன் “அதிமுகவினரால் சட்டமன்ற உறுப்பினரை கூட தேர்ந்தெடுக்க முடியாது” என பேசியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சசிக்கலாவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார்.