1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Educaton board announce quarterly holiday

போகாத பள்ளிக்கு காலாண்டு லீவ்! ஆன்லைன் க்ளாஸ் கிடையாது!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வரும் நிலையில் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக பள்ளிகள் வழக்கம்போல நடைபெற்றிருந்தால் தற்சமயம் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை வந்திருக்கும்.

அதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் பள்ளிகள் ஆன்லைன் பாடங்கள் நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
EPS ஒரு விநோத விவசாயி - உதயநிதி ட்விட்டின் உள்குத்து என்ன??