திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (14:39 IST)

சசிகலா வெளியே வந்தால் அதிமுக இதைத்தான் செய்யும்... ஜெயகுமார்!

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், வராவிட்டாலும் அதிமுகவினருக்கு கவலையில்லை என ஜெயகுமார் கருத்து.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா விரைவில் விடுதலை அடைவார் என்றும் அவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே விடுதலை பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இதுகுறித்து கூறிய போது இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிறை நன்னடத்தை விதிகளின்படி கடந்த மார்ச் மாதமே சசிகலா விடுதலை பெற தகுதி பெற்று விட்டார் என்றும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும், வராவிட்டாலும் அதிமுகவினருக்கு கவலையில்லை என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் தலையிடாதவாறு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதே அதிமுகவின் எண்ணம் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.