காலா போன்ற காளான்கள் காணாமல் போகும்: ஜெயகுமார்

Last Modified புதன், 9 மே 2018 (14:22 IST)
தமிழக அமைச்சர் ஜெயகுமார் கடந்த சில மாதங்களாக ரஜினி, கமல் ஆகிய இருவரையும் சரமாரியாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார். அமைச்சரின் விமர்சனங்களுக்கு அவ்வப்போது கமல் பதிலடி கொடுத்து வந்தாலும் ரஜினிகாந்த் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை
இந்த நிலையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் காலா படத்தின் பாடல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயகுமார், 'காலா போன்ற காளான்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்தது.
'காலா போன்ற காளான்கள் விரைவில் காணாமல் போகும்

காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் இந்த அரசு வேடிக்கை பார்க்காது, நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது' என்று தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு நிச்சயம் இன்று நடைபெறும் 'காலா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பதிலடி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :