வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (11:08 IST)

திடீரென இசைக்கலைஞராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயகுமார் மேளம் அடித்தது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
 
தமிழக அமைச்சர்களில் பேமஸ் ஆனவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். தினமும் 11 மணி ஆனால் டானென செய்தியாளர்கள் முன்னிலையில் ஆஜராகி பல விஷயங்களை பகிர்வார். 
 
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் திடீரென மேளத்தை அடித்தபடி ஊர்வலம் சென்றார். இதனால் பரவசமடைந்த இளைஞர்கள் சந்தோஷத்தில் டான்ஸ் ஆடினர். அமைச்சர் ஜெயக்குமார் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அமைச்சர் இப்படி திடீரென இசைக்கலைஞராக மாறி பலரை குத்தாட்டம் போட வைப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.