திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (18:23 IST)

உயிருக்கு போராடும் தந்தை: மருத்துவமனையில் திருமணம் செய்த மகன்

உயிருக்குப் போராடும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற, மருத்துவமனையில் மகன் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 


 
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சுதேஷ் .  சரக்கு ரயில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த சுதேஷ் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், உயிருக்கு போராடும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய மகன் சதீஷ், தான் காதலித்து வந்த சித்ரா என்ற பெண்ணை மணமுடிக்க முடிவு செய்தார்.
 
இதையடுத்து இருவீட்டாரின் ஒப்புதலுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் உறவினர் முன்னிலையில் சித்ராவை சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.
 
மணமக்கள் ஜோடியாக சென்று படுக்கையில் இருந்த தந்தையிடம் ஆசி பெற்றனர். தமது தந்தை விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று சதீஷ் கண்ணீர் மல்க கூறினார்.