செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (17:37 IST)

’கத்தி எடுக்க கூடாது’ : நடிகர் விஜய்க்கு அறிவுரை கூறிய அமைச்சர் ஜெயக்குமார் !

பிகில் ஆடியோ ரிலிஸ் விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர் போல திரைப்படங்களில் நல்ல கருத்துகளைக் கூற வேண்டுமென நடிகர் விஜய்க்கு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினாலும் மத்தியில் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாக சாடியது விவாதப் பொருளாகியது.
 
இதற்கு அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இப்போது வேறு விதமாக சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ’அரசியல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஏன் கல்வி நிறுவனத்தில் அனுமதிக் கொடுக்கப்பட்டது? எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது? ’ எனக் கேட்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
 
எம்.ஜி.ஆர் போல நல்ல கருத்துகளை திரைப்படங்களில் கூற வேண்டும். விஜய் தன் கையில் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால் அதைப் பார்த்து அவரின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள். 
 
மேலும் மோசமான கருத்துகள் மற்றும் செயல்பாடுகளை திரைப்படங்களில் இடம்பெறச் செய்யக் கூடாது. எனவே, பிகில் இசை வெளீயீட்டு விழா தொடர்பாக சட்டத்திற்கு உட்பட்டு கல்லூரிக்கு, விழா தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார்.