புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:48 IST)

விஜய்யின் மனசாட்சியே அவரை குத்தும்: பொன் ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் சமீபத்தில் நடைபெற்ற ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் பேசினாலும், அதில் அவர் பேசிய இரண்டு கருத்துக்கள் மட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒன்று சுபஸ்ரீ விஷயத்தில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யாமல் இருப்பது குறித்து பேசியதும், மற்றொன்று ’யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் சரியாக இருக்கும்’ என்று பேசியதும் ஆகும்.
 
 
விஜய்யின் இந்த பேச்சு அரசியல்வாதிகள் இடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியது. விஜ்ய்யின் இந்த பேச்சுக்கு கடந்த சில நாட்களாக அதிமுக அமைச்சர்களும் பாஜகவினர்களும், பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகங்களும் தினமும் வேலைவெட்டி இல்லாத நான்கு பேர்களை வைத்து விவாதம் செய்து வருகின்றன
 
 
இந்த நிலையில் ஏற்கனவே விஜய்யின் ‘பிகில்’ விழா பேச்சு குறித்து கருத்து கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இன்று மீண்டும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் இன்று கூறியதாவது: நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன். அவர் அரசியல் கருத்தை கூற கூடாது என்று யாரும் கூற முடியாது. அதே நேரத்தில் உண்மையான அரசியல் கருத்துக்களை கூறினால் யாருக்கும் வருத்தமில்லை. அனைவருக்கும் மகிழ்ச்சி தான் இருக்கும். அப்படி இல்லை என்றால் அவருடைய மனசாட்சியே அவரை குத்தும். இது அவருக்கு மட்டுமல்ல அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்’ என்று கூறியுள்ளார்