திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (15:37 IST)

பிகில் ஆடியோ ரிலிஸ் விழா – கல்லூரியில் இடம் கொடுத்தது ஏன் ?

பிகில் ஆடியோ ரிலிஸ் விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் - அட்லி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்ட விஜய் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினாலும் மத்தியில் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை மறைமுகமாக சாடியது விவாதப் பொருளாகியது.

இதற்கு அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இப்போது வேறு விதமாக சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. பிகில் இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ’அரசியல் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஏன் கல்வி நிறுவனத்தில் அனுமதிக் கொடுக்கப்பட்டது ?. தன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது? ’ எனக் கேட்கப்பட்டுள்ளது.