திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (11:23 IST)

தேர்தலில் மாபெரும் வெற்றி: 5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா!

வங்கதேசத்தில் நேற்று 300 இடங்களுக்கு நடந்த பாராளுமன்ற தேர்தலில், 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது!
 
வங்க தேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது! 
 
இந்த தேர்தலில் வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக பதவியேற்க உள்ளார். 
 
இந்த தேர்தலில்  முக்கிய எதிர்க்கட்சி 20 இடங்களை மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஷேக் ஹசினா ஆட்சியில் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் ஷேக் ஹசீனாவின் வெற்றி வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran