1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (10:26 IST)

முழு ஊரடங்கு நாட்களில் தனியார் பால் நிறுவனங்கள் இயங்குமா? மக்களிடையே குழப்பம்!

தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சிகளில் நாளை முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பில் ‘ஆவின்’ பால் நிறுவனம் இயங்கும் என அறிவித்துள்ளது. மற்ற தனியார் பால் நிறுவனங்களான ஆரோக்யா, ஹட்ஸன் நிறுவனங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

தமிழகத்தின் பால் தேவையில் வெறும் 16 சதவீதம் மட்டுமே ஆவின் நிறுவனத்தால் நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றவை அனைத்தும் தனியார் பால் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஊரடங்கு நாட்களில் பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.