திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 25 ஏப்ரல் 2020 (10:18 IST)

சென்னையின் விபரீத நிலை: பாதிப்பு எண்ணிக்கை என்ன??

சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,452 லிருந்து 24,506 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 723 லிருந்து 775 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,814 லிருந்து 5,063 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 2,815 பேரும், டெல்லியில் 2514 பேரும், ராஜஸ்தானில் 2,034 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,852 பேரும், தமிழகத்தில் 14,755 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னை ராயபுரத்தில் 133 பேரும், தடையார்ப்பேட்டையில் 59 பேரும், திருவிக நகரில் 55 பேரும், தேனாம்பேட்டையில் 53 பேரும், கோடம்பாக்கத்தில் 52 பேரும், அண்ணாநகரில் 39 பேரும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும்,  அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும்,  சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.