புதருக்குள் பதுங்கிய காதல் ஜோடி…வளைத்து படம் பிடித்த போலீஸ் ட்ரோன்!
தமிழகத்தில் 1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், போலீஸார் ஒரு ட்ரோனை அனுப்பி சோதனை செய்கையில்,ஒரு புதருக்குள அமர்ந்து ஒரு காதல் ஜோடி ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்ததை படம் பிடித்தது. அதைப் பார்த்த அவர்கள் அங்கிருந்து இருசக்கர வாகத்தில் தப்பிச் சென்றனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.