வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:39 IST)

பெரியார் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம்: இதுதான் பகுத்தறிவா?

பெரியார் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம்: இதுதான் பகுத்தறிவா?
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பெரியாரின் கட் அவுட்டிற்கு அவருடைய தொண்டர்கள் சிலர் பாலாபிஷேகம் செய்து உள்ளது செய்துள்ளது பெரும் நகைப்புக்குரியதாக உள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்
 
சேலத்தை சேர்ந்த ஒரு சிலர் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மிகப்பெரிய கட்-அவுட் வைத்து அதில் அதில் பாலாபிஷேகம் செய்தனர். பகுத்தறிவு குறித்து  நாள்தோறும் பேசும் பெரியாரின் தொண்டர்கள் பெரியாரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது பகுத்தறிவா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் 
 
பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடினால் மட்டும் போதாது அவருடைய கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்