பெரியார் பிறந்தநாளில் வைரமுத்து கவிதை!
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினையும் பெரியாரையும் வாழ்த்தி கவிதை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
சமூக நீதி என்பது
பேதங்களைப் பேணுவதன்று;
பேதங்கள் நீங்கப்
பாலங்கள் அமைப்பது
சமூக நீதியைக்
கட்டமைத்த பெரியாரும்
அவர் பிறந்த நாளைச்
'சமூக நீதி நாள்' என்று
அடையாளப்படுத்திய
முதல்வர் மு.க.ஸ்டாலினும்
வரலாற்றின் வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுவார்கள்