பெரியார் வழியில் நாமும்- கேரள முதல்வர் டுவீட்
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியார் வழியில் அன்பால் நிறைந்த உலகை உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பெரியாரின் பிறந்த நாள் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய கொள்கையை குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பெரியார் பிறந்தநாளில் கேரள முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.#Periyar எனத் தெரிவித்துள்ளார்.