1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (14:47 IST)

தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருக்கின்றதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Ma Subramanian
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தமிழ்நாடு முழுவதும் 327 அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு தடையில்லாமல் கொடுத்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் தமிழ்நாடு அரசை பொறுத்தவரை மருத்துவ சேவையை அப்பழுக்கற்ற சேவையாக செய்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் மருந்து தடுப்பாடு என்ற சந்தேகம் தோன்றினால் கையிருப்பில் உள்ள மருந்துகளை காட்டுவதற்கு அவர்களை அழைத்து செல்கிறோம் என்றும் அவர் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.