திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:13 IST)

எம் ஜி ஆர் பயோபிக்… இன்னும் எதுவும் முடிவாகவில்லை – இயக்குனர் அறிவிப்பு!

தமிழக முன்னாள் முதல்வர் சூப்பர் ஸ்டார் நடிகருமான எம் ஜி ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தமிழ் சினிமாவில் இது பயோபிக்களின் காலம் போல. இப்போதுதான் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி வெளியாகி மரண அடி வாங்கியுள்ளது. இந்நிலையில் இப்போது அடுத்த எம் ஜி ஆரின் பயோபிக் உருவாக உள்ளதாம்.

இதை தயாரிக்க போவது முன்னணித் தயாரிப்பாளரான தாணு.  படத்தை இயக்கும் பொறுப்பைப் பெற்றுள்ளார் பாட்ஷா மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா. விரைவில் மற்றக் கலைஞர்கள் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ‘எம் ஜி ஆரின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை.’ எனக் கூறியுள்ளார்.