புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (12:58 IST)

ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்த நீர்வரத்து! வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் கபிணி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் நுகு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீர் அளவு 1,23,000 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன் தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 1 லட்சம் கோடி கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 50 அடியிலிருந்து 75.83 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.