1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Metro train schedule extend today 12 AM

வெளியூர் செல்லும் மக்கள்; இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

Chennai
நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலர் வெளியூர் செல்வதால் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் இருப்பதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சென்னையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள் என்பதால் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
குடியிரிமை சட்டத்தை ரத்து செய்ய.. கூனாம்பட்டி மக்களே சிந்திப்பீர்! – சுயேட்சை வேட்பாளரின் சேட்டை போஸ்டர்!