வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

நவராத்திரி எட்டாவது நாள் வழிபாடு !!

அம்பாளை நரசிம்ம தாரிணியாக வழிபடுதல் சிறப்பு. இவள் கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்ஹாரம் செய்யும் வடிவத்தில் காணப்படுவாள். 

இந்த நாளில் 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும். அஷ்டமி திதி முடிவதற்குள் பத்ம கோலம் இட்டு அம்பாளை வழிபடுதல் சிறப்பு. மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி போன்ற மலர்களால் அம்பாளை வழிபடுதல் சிறப்பு. 
 
பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல் போன்றவற்றை அம்பாளுக்குப் படைக்கலாம். அன்று புன்னகை வராளி ராகத்தில் பாடி அம்பாளை பூஜிக்கலாம். இப்படி வழிபடுவதால் கண் திருஷ்டி, செய்வினை கோளாறுகள் அகலும்.
 
வெற்றிகளை தரும் நவராத்திரியின் எட்டாம் நாள் இன்று. கரும்பு வில்லுடன் சுற்றிலும் தன்னுடைய படைகளான அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் போரில் ரக்த பீஜனை சம்காரம் செய்த நரசிம்மதாரினியாக அன்னை வணங்கப்படுகிறாள்.

இன்று அன்னையின் முன் காசுகளைக் கொண்டு, தாமரைப்பூவைப் போன்ற கோலம் போடலாம். அவள் மனம் மகிழ ரோஜா மலர்கள் மற்றும் பன்னீர் இலைகளால் மாலையைச் சுற்றி வழிபடலாம். நைவேத்தியமாக பால் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல், பாயசம் படைக்கலாம்.
 
அன்னைக்கு உரிய திதி: அஷ்டமி, துர்கை காயத்ரி: ஓம் மஹிஷாமர்த்தின்யை வித்மஹே, துர்கா தேவ்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் !